பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
03:04
கோவை : சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவுக்கு செல்லும், பக்தர்களின் வசதிக்காக இன்றும், நாளையும், 300 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா நாளை அதிகாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. இவ்விழாவில், தமிழகம் மட்டுமின்றி கர்நாடகத்தில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர்.பக்தர் கூட்ட நெரிசலை தவிர்க்க, இன்றும் நாளையும் கோவை மண்டலத்தில் இருந்து,80 பஸ்கள், திருப்பூரில் இருந்து, 60, ஈரோட்டில் இருந்து, 120, ஊட்டியில் இருந்து, 40 பஸ்கள் என, 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் கூட்ட நெரிசலை பொறுத்து, கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என, அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.