உடுமலை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. உடுமலையிலுள்ள கோவில்களில், பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் பங்குனி உத்திரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று தமிழ்க்கடவுள் என்றழைக்கப்படும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பிரசன்ன விநாயகர் கோவிலிலுள்ள முருகனுக்கு, காலையில் பல்வேறு பொருட்களால் ஆன சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு முருகன் வள்ளி தெய்வானையுடன் வெள்ளி தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.