Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு ... தன்வந்திரி பீடத்தில் மகாமேரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2017
04:04

திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி  திருவிழாவில்,5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
செய்தனர்.திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், கடந்த மாதம், 23ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா துவங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவர் அம்மன் ஊர்வலம், மதியம் மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவுநாடகம் ஆகியவை நடந்து வந்தது.நேற்று, காலை, 9:30 மணிக்கு துரியோதனன் படுகளம் நடந்தது. தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல்
வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில், முக்கிய வீதிகள் வழியாக பூ கரகத்துடன் ஊர்வலமாக அக்னி குண்டம் அருகே வந்து எழுந்தருளினார். பின், 5,000க்கும்
மேற்பட்டோர் காப்பு கட்டி விரதம்இருந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என, பக்தி
முழக்கமிட்டனர். தொடர்ந்து, வாணவேடிக்கை மற்றும் இரவு, 8:00 மணிக்கு உற்சவர் அம்மன் வீதியுலாவும் நடந்தது. இன்று, காலை, 11:00 மணிக்கு, தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் மற்றும் காந்திநகர் வாசிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar