பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
04:04
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில், நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, ஸ்ரீசக்கரத்துடன் மகாமேரு பிரதிஷ்டை மற்றும் பாரத மாதா,
லட்சுமி கணபதிக்கு புஜர் பிரதிஷ்டையும் நடந்தது. பின், ஐயப்பன் அவதார தினத்தையொட்டி, ஐய்யப்பனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 468 சித்தர்களுக்கும், அன்ன பூரணிக்கும், சிறப்பு பூஜை நடந்தது.