பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
05:04
மோகனூர்: மோகனூர், காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை, 7:00 மணிக்கு, பக்தர்கள் காவடி எடுத்துக் கொண்டு, காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். தொடர்ந்து, பால், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு காவடிகளுடன்
ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். காலை, 11:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுவாமி ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு, 7:00 மணிக்கு, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில், கூலிப்பட்டி கந்தகிரி முருகன் கோவில், ப.வேலூர் கபிலர்மலை பாலசுப்ரமணியர் கோவில்,
திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும், முருகன் கோவில்களில், பங்குனி உத்திர விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.