பதிவு செய்த நாள்
05
நவ
2011
11:11
திருச்சி: திருச்சி ஐயப்பன் கோவிலில் வரும் 17ம் தேதி 27வது மண்டல பூஜை துவங்குகிறது.திருச்சி லாசன்ஸ் ரோட்டிலுள்ள ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மண்டல பூஜை விழா சிறப்பாக நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு 27வது மண்டல பூஜை விழா நவம்பர் 17ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது.விழாவை முன்னிட்டு நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், 6.30 மணிக்கு அபிஷேகம், 7.30 மணிக்கு உஷத் பூஜை, சீவேலியும், 10.15 மணிக்கு கோமாதா பூஜையும், 10.30 மணிக்கு உச்சகால பூஜையும் நடைபெறும். காலை11 மணிக்கு நடை சாத்தப்படும்.இதேபோல், மாலையில் 5 மணிக்கு நடைதிறக்கப்படும். 6 மணி முதல் 6.30 மணி வரை ஐயப்பன்மார் கூட்டு வழிபாடு மற்றும் கற்பூர ஆழியும், 6.30 மணி முதல் 7 மணி வரை மாலை பூஜை. தீபாராதனையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரை உபந்யாச நிகழ்ச்சியும், 9 மணி முதல் 9.40 மணி வரை ரதபவனி, ஹரிவாசனமும் நடைபெறும். அதைத்தொடர்ந்து நடை சாத்தப்படும். ஐயப்பனுக்கு வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை பிரமோத்சவ பூஜை நடக்கிறது. 20ம் தேதி அன்னதானமும், அன்று மாலை கொடியேற்றத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி இரவு பள்ளி வேட்டையும், 25ம் தேதி மாலை காவிரியில் ஆராட்டும், அதன் பின்னர் கொடியிறக்கமும் நடைபெறும். இந்த உற்சவ நிகழ்ச்சிகளை சபரிமலை பிரதான தந்திரி கண்டரு ஸ்ரீமகேஸ்வரரு நடத்துகிறார். உற்சவ நாட்களில் நாள்தோறும் இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை ஆன்மிக தொடர் சொற்பொழிவு நடக்கிறது.ஏற்பாடுகளை திருச்சி ஸ்ரீஐயப்ப சங்கத்தினர் செய்து வருகின்றனர்.