பதிவு செய்த நாள்
11
ஏப்
2017
03:04
ஈரோடு: ராமானுஜர் அவதார நட்சத்திர தின விழாவை முன்னிட்டு வரும், 13ல் கட்டுரை, பேச்சுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள், ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் நடக்கிறது. ராமானுஜர், 1,000வது அவதார நட்சத்திர தின விழாவைமுன்னிட்டு, அவரின் வாழ்க்கை வரலாறு, இந்து சமயத்துக்கு அவர் ஆற்றிய ஆன்மிக பணிகள், அவர் இயற்றிய நூல்களான பாஷ்யம், பகவத் கீதை ஆகியவற்றின் விளக்க உரைகள், விசிஷ்டாத்வைதம்
உள்ளிட்டவை தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி, கலை நிகழ்ச்சி ஈரோடு கோட்டை அரங்கநாதர் கோவில் வளாகத்தில், 13ல், காலை, 10:00 மணி
முதல், 4:00 மணி வரை நடக்கிறது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, எஸ்.எஸ்.எல்.சி., முதல் பிளஸ் 2 வரை, தனித்தனியே
போட்டி நடக்கிறது. இதில் மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்க, கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.