சென்னிமலை: முருங்கத்தொழுவு கிராமம், வாவக்காடு கருப்பணசாமி, தன்னாசியப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சென்னிமலை அடுத்த, அரச்சலூர் சாலையில் உள்ள வாவக்காட்டில், கருப்பணசாமி, தன்னாசியப்பன் கோவில் உள்ளது. இவை புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கி, மாலை வாஸ்து சாந்தி பூஜை மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தன. வேத மந்திரங்கள் முழங்க கருப்பணசாமி, தன்னாசியப்பன், கன்னிமார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.