சென்னை: சென்னை, சூளை, அவதானப்பாப்பையா சாலையில் மிகப்பழமை வாய்ந்த கோதண்டராமசாமி கோவில் உள்ளது. இங்கு ராமநவமிபிரம்மோற்சவ வைபவம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு, திருத்தேர் பவனி நடைபெற்றது. பலவித மலர் அலங்காரத் தேரில் கோதண்டராமர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.