Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொல்லங்குடி வெட்டுடையார் ... உடுமலை மாரியம்மனுக்கு இன்று திருக்கல்யாண வைபவம் உடுமலை மாரியம்மனுக்கு இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்து காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா: குண்டம் இறங்கி பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொண்டத்து காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா:  குண்டம் இறங்கி பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
12:04

அனுப்பர்பாளையம்:  பெருமாநல்லூர் கொண் டத்து காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், பல ஆயிரம் பக்தர்கள், நேற்று குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

திருப்பூரை அடுத்த பெருமா நல்லூரில், புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 5ல் துவங்கியது. நேற்று அதிகாலை, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சாவடியில் பொங்கல் வைத்து, குதிரையுடன் படைகலம் கொண்டு வரப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள பரிவார மூர்த்திகள் கன்னிமார், கருப்பராயன், முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு, அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கொண்டத்துக்காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவில் பூசாரிகள் மனோகரன், முருகானந்தம் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக் கணக்கான பக்தர்கள், மஞ்சள் நிற உடை உடுத்தி, மஞ்சள் நீர் கிணற் றில் குளித்து, வரிசையில் நின்று பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர். அதன் பின், குண்டத்தில் உப்பு, மிளகு போட்டு, பொங்கல் வைத்தல், மொட்டை போடுதல், கரும்பு படைத்தல் உள்ளிட்ட வேண்டுதல்களை, பக்தர்கள் நிறைவேற்றினர். காலை, 9:00 மணிக்கு, குண்டம் மூடுதல்,  சிறப்பு அக்னி அபிஷேகம், அபிஷேக தீபாராதனை, அம்மன் பூதவாகன காட்சி யுடன் வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மதியம் அன்ன தானம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, சிம்ம வாகனத்தில் அம்மன் திருத்தேரில்  எழுந்தருளினார்; மாலை, 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், திருப்பூர், அவிநாசி, குன்னத்துõர், நம்பியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். பல்வேறு அமைப்புகள் சார்பில், நீர்மோர் வினியோகம், அன்னதானம் உள்ளிட்ட வற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar