Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டத்து காளியம்மன் கோவில் ... கோத்தகிரியில் குண்டம் விழா அம்மன் பக்தர்கள் பரவசம் கோத்தகிரியில் குண்டம் விழா அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மனுக்கு இன்று திருக்கல்யாண வைபவம்
எழுத்தின் அளவு:
உடுமலை மாரியம்மனுக்கு இன்று திருக்கல்யாண வைபவம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
12:04

உடுமலை: உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழாவையொட்டி, அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் இன்று நடக்கிறது. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கோவிலில், திருவிழா மற்றும் தேரோட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, திருவிழாவுக்கு, கடந்த மாதம் 28ம் தேதி நோன்பு சாட்டப்பட்டது.

திருக்கம்பம் நிலைநாட்டுதல், கொடியேற்றத்துக்கு பிறகு, திருத்தேரோட்டம் நாளை நடக்கிறது. இதையொட்டி, நாள்தோறும், அம்மன் திருவீதி உலா சிறப்பு அலங்காரத்தில், நடந்து வருகிறது.  நேற்றுமுன்தினம் இரவு அன்ன வாகனத்தில், அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா நடந்தது. இன்று அதிகாலை முதல், மாவிளக்கு எடுத்து, பக்தர்கள் வழிபாடு செய்யலாம். இன்று மாலை, 4:00 மணிக்கு கோவில் வளாகத்தில், அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு மேல், மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4:15 மணிக்கு மேல், திருத்தேரோட்டமும் நடக்கிறது. நகரம் மற்றும் கிராமங்களிலிருந்து பக்தர்கள், நாள்தோறும் கொளுத்தும் வெயிலை கூட பொருட்படுத்தாமல், தீர்த்தம் எடுத்து வந்து திருக்கம்பத்துக்கும், அம்மனுக்கும் செலுத்தி, வழிபாடு நடத்தி வருகின்றனர். தேரோட்டத்துக்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்து அற நிலையத்துறையினர் செய்துள்ளனர். தேரோடும் வீதிகளான தளி ரோடு, தலகொண்டம்மன் கோவில் வீதி, தங்கம்மாள் ஓடை வீதி ஆகிய பகுதிகளில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகள் மற்றும் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar