Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: மதிநுட்பத்தால் வெற்றி ... சிம்மம்: துணிச்சலுடன் செயலாற்றும் சிம்ம ராசி அன்பர்களே! சிம்மம்: துணிச்சலுடன் செயலாற்றும் ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கடகம்: கடமையில் ஆர்வமுடன் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடகம்: கடமையில் ஆர்வமுடன் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே!

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
02:04

குடும்பத்தில் மகிழ்ச்சி தொழிலில் வளர்ச்சி

இந்த மாதம் வளர்ச்சியான காலமாக அமையும். ஏப்.27ல்  புதன், சுக்கிரனுடன் இணைந்து சுபபலனை வாரி வழங்குவர். ராசிக்கு 10ல் இருக்கும் சூரியன் மாதம் முழுவதும் நன்மையளிப்பார்.  செவ்வாய் 11ம் இடத்திற்கு மாறுவதால் கடந்த கால பிரச்னை இனி இருக்காது.  புதிய வீடு, வாகனம் வாங்க வாய்ப்புண்டு.  ஏப். 26  வரை புதன் சாதகமற்று இருப்பதால்  முயற்சியில் சிறு தடைகள்  குறுக்கிட்டு மறையும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக நிறைவேறும். பிள்ளைகளின் வழியில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். வருமானம் திருப்தியளிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். ஏப்.26க்கு பிறகு பெண்களால் பொன், பொருள் சேரும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏப்.28,29ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். ஆனால் அவர்கள் வகையில் மே 9,10ல் பிரச்னை உருவாக வாய்ப்புண்டு. உடல்நிலை திருப்தியளிக்கும். கடந்த காலத்தில் இருந்த மருத்துவச் செலவு இனி இருக்காது. ஆனால், அலைச்சலால் அசதிக்கு ஆளாக நேரிடலாம்.                                                                                

தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். சேமிக்கும் விதத்தில் வருமானம் அதிகரிக்கும். வங்கி நிதியுதவியுடன் புதிய தொழில் முயற்சியில் ஈடுபட வாய்ப்புண்டு. ஏப்.26க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகத்திலும் ஆதாயம் அதிகரிக்கும். கூட்டு தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். ஏப்.17,18, மே 14ல் எதிர்பாராத வகையில் வருமானம் வர வாய்ப்புண்டு. பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். சிலருக்கு  புதிய பதவி தேடி வரும். ஏப்.26க்கு பிறகு சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.  மாத முற்பகுதியில் பணிச்சுமை குறுக்கிட்டாலும் திறம்பட சமாளிப்பர். ஏப்.26,27ல் நிர்வாகத்தின் மூலம் பரிசு, பாராட்டு கிடைக்கும்.  நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.      
                                                                         
கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். அரசு வகையில் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நற்பெயர் காண்பர். சிலருக்கு தலைமையின் ஆதரவால் புதிய பதவி கிடைக்கும். தொண்டர்களின் நலனில் அக்கறை உண்டாகும். அரசியல் ரீதியான நீண்ட துாரப் பயணம் அடிக்கடி செல்வர். மாணவர்களுக்கு மாத முற்பகுதியில்  விடாமுயற்சி தேவை. ஏப்.26க்கு பிறகு வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். தேர்வில்  அதிக மதிப்பெண் கிடைக்கும். போட்டி, பந்தயத்தில் வெற்றி காண்பர். நண்பர்களால் உதவி உண்டு. விவசாயிகள் நெல், சோளம், பழவகைகள், கிழங்கு வகைகள் போன்றவற்றில் கூடுதல் வருமானம் காண்பர். திட்டமிட்டபடி  புதிதாக நிலம்  வாங்க யோகமுண்டு. நிலப்பிரச்னையில் சுமூகத்தீர்வு கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் அதிகரிக்கும்.  வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு ஏற்படும்.                                                                               

பெண்கள்  குடும்பத்தாரிடம் நன்மதிப்பிற்கு உரியவராவர்.  கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் மத்தியில் செல்வாக்கு கூடும்.  வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். தோழிகள் பணி விஷயத்தில் உதவி செய்வர். சிலருக்கு  புதிய பதவி தேடி வரும். மே 7,8ல் ஆடை, நகை வாங்குவர்.  பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கப் பெறலாம். ஏப்.19,20  சிறப்பான நாட்களாக இருக்கும். சகோதரிகளால் உதவி உண்டு.

நல்ல நாள் : ஏப்.17,18,19,20,26,27,28,29, மே 2,3,7,8,14                                                                               
கவன நாள் :  ஏப்.21,22,23  சந்திராஷ்டமம்.  இந்த நாட்களில் பண விஷயத்தில் கவனமாக
இருங்கள். குடும்ப பிரச்னைகளை அணுகும்போது பொறுமை தேவை.
அதிர்ஷ்ட எண் : 1,3,9  
நிறம் : சிவப்பு, வெள்ளை, பச்சை.   

பரிகாரம்: சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு. ராகு, கேதுவுக்கு அர்ச்சனை.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar