Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: பெற்றோர் மீது பேரன்பு கொண்ட ... விருச்சிகம்: எதையும் சாதித்து காட்டும் விருச்சிக ராசி அன்பர்களே! விருச்சிகம்: எதையும் சாதித்து ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
துலாம்: பெருந்தன்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துலாம்: பெருந்தன்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே!

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
03:04

பணியாளர்களுக்கு பதவி உயர்வு

ஏப்.26- வரை புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் எடுத்த காரியம் வெற்றி அடையும்.  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். 11-ம் இடத்தில் இருக்கும் ராகு தொடர்ந்து நற்பலனைக் கொடுப்பார். ராகுவின் பலத்தால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும், சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், அவ்வப்போது சில பிரச்னைகள் தலைதுாக்கும். வெளியிடத்தில் மரியாதை குறையலாம். வீண்விவாதத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் பெண்கள் ஆதரவுடன் இருப்பர். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.  மே 9,10-ல் சில வகைகளில் பணம் கிடைக்கும். விருந்து, விழாவுக்கு சென்று வருவீர்கள். ஏப்.19,20-ல் உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். அப்போது அவர்களிடம் சற்று விலகி இருக்கவும். அதேநேரம், மே 4,5,6-ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் ஏற்படும். ஏப்.26-க்கு பிறகு குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். தேவையற்ற கவலை ஏற்படும்.  பொறுமையாகவும், விட்டுக் கொடுத்தும் போனால் இவற்றை எளிதாகத் தவிர்த்து விடலாம்.       

தொழிலதிபர்கள், வியாபாரிகள் மிகுந்த வளர்ச்சி நிலையை அடைவார்கள். அவ்வப்போது சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும், அவற்றை உடைத்தெறிந்து முன்னேற்றம் காண்பீர்கள்.  அதற்காக எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். உங்கள் சமயோசித புத்தியைப் பயன்படுத்தினால் போட்டிகளைச் சமாளித்து முன்னேற்றம் காணலாம். ஏப்.24,25-ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். சனி பகவானால் பொருட்கள் களவு போக நேரிடும். எனவே உங்கள் நிறுவனத்தில் பாதுகாப்பு ஏற்பாட்டைப் பலப்படுத்துவது நல்லது. பணியாளர்கள் ஏப்.26 வரை நல்ல வளர்ச்சி காண்பர். புதிய பதவி, பதவி உயர்வு கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஏப்.26-க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன் பிறகு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.  மே 2,3- சிறப்பான நாட்களாக அமையும்.       

கலைஞர்களுக்கு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி பெறலாம். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்ணும், பாராட்டும் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி காணலாம். ஏப்.26-க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களில் சிறப்பான  மகசூல் கிடைக்கும்.  புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். ஆனால் பாதகமான முடிவு வராது. பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். உங்களால் வீடு சிறப்படையும்.  கணவருடன் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.  ஏப்.26,27-ல் சிறப்பான நாட்களாக அமையும். சகோதரிகள் வகையில் பணஉதவி கிடைக்கும். ஏப்.17,18, மே14-ல் புத்தாடை-, நகை வாங்கலாம். உடல்நலத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். செவ்வாயால் உஷ்ண, பித்தம், மயக்கம், சளி உபாதை வரலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. ஏப்.30, மே1-ல் உடல் நலனில் சற்று அக்கறை காட்டுவது நல்லது. பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

நல்ல நாள் -: ஏப்.17,18,24,25,26,27 மே 2,3,4, 5,6,9,10,14.
கவன நாள் : ஏப்.28,29- சந்திராஷ்டமம். இந்த காலத்தில் வீண்விவாதங்களை தவிர்க்கவும். பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்- : 5,7       நிறம் : நீலம், பச்சை.

பரிகாரம்: வெள்ளியன்று சுக்கிரன் வழிபாடு. செவ்வாயன்று முருகனுக்கு  அர்ச்சனை.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar