Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: எதையும் சாதித்து ... மகரம்: நல்ல உள்ளம் படைத்த மகர ராசி அன்பர்களே! மகரம்: நல்ல உள்ளம் படைத்த மகர ராசி ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
தனுசு: அனைவருக்கும் நல்லதை விரும்பும் தனுசு ராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:
தனுசு: அனைவருக்கும் நல்லதை விரும்பும் தனுசு ராசி அன்பர்களே!

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
03:04

சொத்து வாங்க நல்ல மாதம்

கடந்த மாதம் சில பிரச்னைகள் நிகழ்ந்திருக்கலாம். இந்த மாதம் செவ்வாய் சாதகமான இடத்திற்கு வந்திருப்பதால் அவற்றுக்கு விடைகொடுத்து முன்னேற்றம் காணலாம். மேலும் 3-ம் இடத்தில் இருக்கும் கேது, 4-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் தொடர்ந்து நற்பலனைக் கொடுப்பார்கள். 4-ம் இடத்தில் இருக்கும் புதன் ஏப். 26- வரை நற்பலன் தருவார். தெய்வ அனுகூலம் தொடர்ந்து இருக்கும். இதனால் அபார ஆற்றல் பிறக்கும். எடுத்த செயல்கள் வெற்றி அடையும். செவ்வாய் சாதகமாக காணப்படுவதால் வீடு, மனை, விவசாய நிலம் வாங்க நினைப்பவர்கள் இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளவும். குடும்ப பெரியோர்கள் மிகவும் ஊறுதுணையாக இருப்பர் வருமானத்தில் முன்னேற்றம் காணலாம். சுக்கிரனால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். அவர்களால் உதவி கிடைக்கும். ஏப்.26-க்கு பிறகு கணவன், மனைவி இடையே சிறுசிறு பிரச்னைகள் வந்து மறையும். ஏப்.17,18 மே 14-ல் பெண்களால் முன்னேற்றம் காணலாம். ஏப்.24,25-ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரவாய்ப்பு உண்டு என்பதால் விலகி இருக்கவும். ஆனால் மே 9,10-ல் அவர்களால் நன்மை
நடக்கும்.   
                           
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு முன்னேற்றம் தரும் மாதம். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். பழைய கடன்கள் அடைபடும். சேமிப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஏற்படலாம். ஏப்.28,29ல் எதிர்பாராத வகையில் பணவரவு  இருக்கும். ஆனால் ஏப்.14,15,16,19,20 மே11,12,13ல் வரவு, செலவை நீங்களே நேரடியாகக் கண்காணிப்பது பணவிரயத்தைத் தடுக்கும். பணியாளர்கள் உன்னத நிலையில் இருப்பர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு  ஏப்.26-க்குள் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். கோரிக்கைகள் நிறைவேறும். ஏப்.26க்கு பிறகு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.   மே 7,8-ல் முக்கிய கோரிக்கைகளை வைத்தால், அவை நிறைவேறும் வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு புகழும், பாராட்டும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் சிறப்பான புதிய பதவி பெற வாய்ப்பு இருக்கிறது. ஏப்.26,27-ல் மனக்குழப்பம் ஏற்படலாம். அந்நாட்களில் பிறகட்சி சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை.                               

மாணவர்கள் மாதத் தொடக்கத்தில் புதன் சாதகமாக காணப்படுவதால் சிறப்பான முன்னேற்றம் காணலாம். நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம். ஏப்.26-க்கு பிறகு போட்டி தேர்வு விஷயத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்  சிரத்தை எடுத்து படித்தால்தான் விரும்பும் கல்லுாரி அல்லது கோர்ஸில் இடம் கிடைக்கும்.விவசாயிகள் முன்னேற்றம் அடைவர். எந்த பயிர் செய்தாலும் நல்ல வருமானம் காணலாம். ஆடு, மாடு மூலம் நல்ல வளம் கிடைக்கும். பால் தொழிலில் முன்னேற்றம் காணலாம். வழக்கு, விவகாரங்களில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். பெண்களுக்கு மாதத் தொடக்கத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நிச்சயமாகும். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பைப் பெறலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ஏப்.26-க்கு பிறகு சிற்சில விஷயங்களில் பொறுமையாகவும், விட்டு கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக வேலைப்பளுவைச் சந்திக்க வேண்டி வரும். உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். ஏப்.21,22,23-ல் புத்தாடை, நகை வாங்கலாம். ஏப்.30 மே1ல் சகோதரர்கள் மூலம் பணவரவு காணலாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர்.

நல்ல நாள்: -ஏப்.17,18,21,22,23,28,29,30
மே 1, 7,8,9,10,14.
கவன நாள்: மே 2,3- சந்திராஷ்டமம் இந்த
நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண் :- 3,7     நிறம் :- சிவப்பு, வெள்ளை  

பரிகாரம்: வெள்ளியன்று சிவன் வழிபாடு. ஞாயிறன்று ஏழைக்கு தானம்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar