பதிவு செய்த நாள்
13
ஏப்
2017
02:04
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, புதுப்பட்டி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, நேற்று, அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. அதில், கோவிலில், நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், உருளுதண்டம் போட்டும், நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 5:00 மணிக்கு மேல், சின்னகிருஷ்ணாபுரம் பெரியகிருஷ்ணாபுரம், மத்தூர், வாழப்பாடி, கொட்டவாடி,
வைத்தியகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து, பல்வேறு அலகுகுத்தியும், தீச்சட்டி, பூங்கரகம் எடுத்தும், ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். இன்று மாலை, 4:00 மணிக்கு மேல், தேரோட்டம் நடக்கிறது.