ராசிபுரம்: குருசாமி பாளையம் மாரியம்மன் கோவிலில் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு யாகம் மற்றும், 108 கலச அபிஷேகம் நடந்தது. ராசிபுரம் அடுத்த, குருசாமிபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை, 7:30 மணியளவில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நவராத்திரி குழு சார்பில், விவசாயம் செழிக்க மழை வேண்டியும், உலக மக்கள் நன்மைக்காகவும் சிறப்பு யாகம் மற்றும், 108 கலச பூஜை நடந்தது. நவராத்திரி குழு தலைவர் பழனிசாமி சிவாச்சாரியார் தலைமையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர ஹோமம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு யாகத்தில் வைக்கப்பட்ட, 108 கலச புனித நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், சிறப்பு தீபாராதனை நடந்தது.