குமாரபாளையம்: குமாரபாளையத்தில், கோவில் செல்லும் வழியில் உள்ள கம்பத்தில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. குமாரபாளையம் - சேலம் பிரதான சாலை நகராட்சி அலுவலகம் அருகே, ராஜா வீதி முக்கியமான சாலைகளில் ஒன்று. காளியம்மன், சவுண்டம்மன் ஆகிய கோவில்களும், பல்வேறு தொழில் நிறுவனங்களும் இப்பகுதியில் உள்ளன. வீதியின் நுழைவுப்பகுதியில் உள்ள கம்பத்தில் இருந்த மின் விளக்கு பழுதானதால், பல மாதங்களாக அது பொருத்தப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் சாலையின் நுழைவுப்பகுதியில் இருட்டாக உள்ளதால், கோவில் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. கல்லூரி மற்றும் வேலைக்கு சென்று விட்டு வரும் பெண்கள் அச்சத்துடன் வர வேண்டியுள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு முக்கியமான இந்த சாலையில் மின் விளக்கு அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.