பதிவு செய்த நாள்
15
ஏப்
2017
03:04
காளையார்கோவில்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காளையார்கோவில் சோமேஸ்வரர் -சவுந்தரநாயகி அம்மன், சொர்ணகாளீ ஸ்வரர்- சொர்ணவள்ளி அம்மன், சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள் ஹேவிளம்பி ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசித்தார். நல்ல மழைபெய்யும், நல்ல மகசூல் கிடைக்கும், விலைவாசிகுறையும் என, தெரிவிக்கப்பட்டது.
ஏற்பாட்டை மாந்தாளி கிராமத்தினர் செய்தனர். சுகந்தவனபெருமாள் கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெள்ளி அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஜெப யாக பூஜை, திருமஞ்சன பூஜை, 1008 சகஸ்ரநாம அர்ச்சனைகள் , சிறப்பு அபிஷேகம் தீபாரதனைகள் நடந்தன. புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. மாந்தாளி கண்மாய்க் கரையில்
செட்டியூரணி சித்திவிநாயகர் கோயில் காலையில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சங்கரஹரசதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வால்மேல் நடந்த அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. உருவாட்டி
பெரியநாயகி அம்மன் கோயில் சிறப்பு அபிஷேகம், தீபாரனை நடந்தது.