கீழக்கரை;ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விஷு கனி தரிசனம் நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம் செய்யப்பட்டு, மூலவர் வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டாபிஷேகம், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மா, பலா, வாழை உள்பட 36 வகை கனிகளால் தோரண அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு சன்னதியில் கைநீட்டம் வழங்கப்பட்டது. உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடந்த பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை குருசாமி மோகன், வல்லபை ஐயப்பன் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.