ஈரோடு: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட தேவாலயங்களில், நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஏசு உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும், ஈஸ்டர் திருநாளை ஒட்டி, ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில், நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்வை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தனர். இதேபோல் பிரப் ரோட்டில் உள்ள பிரப் சர்ச், பெத்தேல் சர்ச்சுகளிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையுடன், ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் அனைத்து சர்ச்களிலும் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு களைகட்டியது. இதில், கிறிஸ்தவ மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழாவையொட்டி சர்ச்சுகள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன.