புனித சூசையப்பர் ஆலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2017 02:04
செந்துறை; செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஒளி, இறைவாக்கு, திருமுழுக்கு, நற்கருணை ஆகிய வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து விளக்குகள் அனைக்கப்பட்டு இயேசு உயிர்ப்பிப்பு நிகழ்ச்சி நடந்தது. பாதிரியார்கள் லாரன்ஸ், எட்வர்ட், ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடத்தினர். சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, ஆலயத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்றனர். அதை தங்களது வீடு, விவசாய நிலம் மற்றும் கிணறுகளில் ஊற்றினர். இதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாகும்.