பதிவு செய்த நாள்
17
ஏப்
2017
02:04
தேனி:தேனி வேதபுரீஆசிரமத்திற்கு கடந்த 15ம் தேதி மாலை வந்த சிருங்கேரி பீடாதிபதி பாரதி தீர்த்த மகா சன்னிதானம், விதுசேகர பாரதி சன்னிதானம் சுவாமிகளுக்கு வரவேற்பு
அளிக்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு சந்திரமவுலீஸ்வர பூஜை நடந்தது. இரண்டாம் நிகழ்ச்சியான நேற்று காலை 10:00 மணிக்கு ஆர்யா தரிசனம், பாதபூஜை, பிஷாவந்தனம், தீர்த்தப்பிரசாதம் நடந்தது.பின் புது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியும்,
அதனை தொடர்ந்து ஆதிகுரு கிருந்தாலயா பாரதி தீர்த்த வித்யார்த்தி விலாசக கட்டடத்தை ஜகத்குருக்கள் பார்வையிட்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். மாலையில் தட்சிணாமூர்த்தி வித்யா பீடத்திற்கு லட்சார்ச்சனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மேல் உபன்யாசம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு ஸ்ரீசந்திர மவுலீஸ்வர பூஜையும், பக்தர்களுக்கு அருளாசியும் நடந்தது. ஓம்காரனந்தா சுவாமி தலைமையில்
அறங்காவலர் ,தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தினர். இன்று மூன்றாம் நிகழ்ச்சியாக காலை10:00 மணிக்கு ஆசார்ய தரிசனம், பாத பூஜை, பிஷாவந்தனம், தீர்த்தப்பிரசாதம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு பல மந்த்ராஷதை ஆசி வழங்குதலும், மாலை 5:00
மணி பெரியகுளம் முகாமிற்கு புறப்பாடுதலும் நடக்கிறது.