பதிவு செய்த நாள்
18
ஏப்
2017
12:04
பண்ணாரி: பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா, மறுபூஜையுடன் நேற்று நிறைவடைந்தது. ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் அருகேயுள்ள, பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா, கடந்த மாதம், 28ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 11ல் லட்சக்கணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து மாவிளக்கு பூஜை, புஷ்பரத ஊர்வலம், திருவிளக்கு பூஜை நடந்தது. இந்நிலையில் குண்டம் திருவிழா வின், நிறைவு நிகழ்ச்சியான மறுபூஜை நேற்று நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்தில் மெரவணை பூஜை நடந்தது. பக்தர்கள் வேல் எடுத்தபடி கோவிலை சுற்றி வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, கோபி, ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.