பதிவு செய்த நாள்
18
ஏப்
2017
12:04
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, கொட்டவாடி மகாசக்தி மாரியம்மன் கோவிலில், நேற்று மதியம், 1:00 மணிக்குமேல், மழைவேண்டியும், ஊர்மக்கள் சுபிட்சம் பெறவும், ஏராளமான பக்தர்கள், அம்மனுக்கு கூழ்படைத்தனர். இரவு, 8:00 மணிக்கு, ஏத்தாப்பூர் சிவாச்சாரியர் ஞானஸ்கந்த குருக்கள் முன்னிலையில், திருவிளக்கு பூஜை நடந்தது. அதில், பேளூர் கரடிப்பட்டி, கொட்டவாடி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான சுமங்கலி பெண்கள், தீபம் ஏற்றி, அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி, மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை, 10:00 மணிக்குமேல், கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைக்கப்படுகிறது.