Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி சுப்பிரமணிய சுவாமி கோயில் ... அட்சய திரிதியையில் ஆதிசங்கரரின் அருள்பெற காலடி கோயிலுக்கு வாங்க! அட்சய திரிதியையில் ஆதிசங்கரரின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வலம்புரி சங்கு: வளம் பெருகும்
எழுத்தின் அளவு:
ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வலம்புரி சங்கு: வளம் பெருகும்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2017
10:04

திருப்பூர்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், வலம்புரி சங்கு வைத்து பூஜை செய்ய உத்தரவாகியுள்ளது. இதனால், வளம் பெருகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம். பக்தர்களின் கனவில் வரும் சிவன்மலை ஆண்டவர், குறிப்பால் உணர்த்தும் பொருள், கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து, பூஜிப்பது நீண்ட நாளாக நடந்து வருகிறது.

கனவில் வந்த பொருளை, பக்தர்கள் எடுத்து வந்தால், அதை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என்று, சுவாமியிடம் பூ போட்டு, அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்பட்டு, புதிய பொருள் வைக்கப்படும். இங்கு இதுவரை மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை உள்ளிட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவன்மலை கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர் கவுரிசங்கர் கனவில், வலம்புரி சங்கு வைத்து பூஜிக்க உத்தரவானது. இதையடுத்து, நேற்று பூ போட்டு, ஆண்டவர் உத்தரவு பெட்டியில், வலம்புரி சங்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது.

கோவில் சிவாச்சாரியார்கள் கூறுகையில்,
’ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ, அது சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். சிவபெருமானுக்கும், முருகனுக்கும் சங்காபிஷேகம் செய்யும், சங்கு வைக்கப்பட்டிருக்கிறது. நாடு தற்போது வறட்சியில் உள்ளது. இனி, சுபிட்சமாக மாறும்; மழை பெய்யும்; நாடு வளம் பெறும். சமுதாயத்தில் இதன் தாக்கம், போகப்போக தெரியவரும்’ என்றார்.கடந்த ஜன.,10ல், இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டது. அதன் பின்னரே, சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா தண்டனை உறுதி செய்யப்பட்டு, சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar