பதிவு செய்த நாள்
24
ஏப்
2017
11:04
படூர்: கேளம்பாக்கம் அருகே, படூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில், ராமானுஜரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம்
அடுத்த, படூர் கிராமத்தில், பாமா ருக்மணி சமேத வெங்கடேசபெருமாள் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இக்கிராமத்தினரின் முயற்சியால், 30லட்சம் ரூபாய் செலவில் புதிய கோவில் கட்டப்பட்டு, சம்ரோஷ்ணம் கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தினசரி வழிபாடுகளும், சனிக்கிழமையில் சிறப்பு வழிபாடும் இக்கோவிலில் நடந்து வருகிறது. இக்கோவில் வழிபாட்டு குழுவினரால், ராமானுஜரின், ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, அவரின் சிலை கோவில் பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் படி, ராமானுஜரின் பஞ்சலோக சிலை, கோவில் பிரகாரத்தில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக, விக்கிரகத்திற்கு, திருமஞ்ஜன வைபவம்நடந்தது. பின், மலர் அலங்காரத்தில், ராமானுஜர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள்
பங்கேற்று, ராமானுஜரை வழிபட்டனர்.