ஸ்ரீபெரும்புதுார்: ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவின் இரண்டாவது நாளான நேற்று யாளிவாகனத்தில் சென்று ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவின் இரண்டாவது நாளான நேற்று காலை பல்லக்கிலும், மாலை யாளி வாகனத்தில் உற்சவர் ராமானுஜர் திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, மதியம் ராமானுஜருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.