ஸ்ரீபெரும்புதூர்: ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழாவின் நான்காவது நாளில் ராமானுஜர் சிம்ம வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த மகான் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு திருஅவதார விழா ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், நடைபெற்று வருகின்றது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவின், நான்காவது நாள் விழாவில், காலை சிம்ம வாகனத்தில், ராமானுஜர் திரு வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை தொடர்ந்து ராமானுஜருக்கு திருமஞ்சனமும், மாலை மங்களகிரியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டு சென்றனர்.