பாபநாசம்: பாபநாசத்தில் உலக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் லட்சார்ச்சனை நடந்தது. பாபநாசத்தில் பிரசித்தி பெற்ற இரட்டை விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் காலை எட்டு மணிக்கு உலக நலன் மற்றும் மக்கள் நலனுக்காக கணபதி ஹோமத்துடன் ஏக தின லட்சார்ச்சனை நடந்தது. லட்சார்ச்சனையை சென்னை தொழிலதிபர் கோபால் மற்றும் அறநிலையதுறை ஆய்வாளர் ஹம்சன் ஆகிய இருவரும் துவக்கி வைத்தனர். லட்சார்ச்சனையில் கைலாசம் குருக்கள் தலைமையில் 15 சிவச்சாரியார்கள் பங்கேற்று, மந்திரங்கள் ஓதி இரட்டை விநாயகருக்கு லட்சார்ச்சனை செய்தனர். லட்சார்ச்சனையை முன்னிட்டு இரட்டை விநாயகருக்கு சிறப்பு பூஜையும், அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் இறைபணி மன்றம் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.