இடைப்பாடி: இடைப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியில், பருவதராஜகுல ஊர் உறவினரின், மாரியம்மன், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இடைப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியில், பருவதராஜகுல சமுதாயத்துக்கு சொந்தமான, மாரியம்மன், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று அதிகாலை நடந்தது. அதிகாலை 4.30 மணியளவில் செல்வவிநாயகர் கோவிலின் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, மாரியம்மன் கோவில் கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேக விழாவில், கவுண்டம்பட்டி, வெள்ளாண்டிவலசு, க.புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் கமிட்டி தலைவர் பழனியப்பன், ஊர் தலைவர் மணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.