பதிவு செய்த நாள்
08
நவ
2011
11:11
சேலம்: சேலம், காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரருக்கு, வரும் 10ம் தேதி அன்னாபிஷேகம், அன்னம் சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. சேலம், செவ்வாய்ப்பேட்டை மங்களாபுரி மாரியம்மனுக்கு, வரும் 10ம் தேதி மதியம் 3 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு சிறப்பு சாகம்பரி அலங்காரம், அன்னப்பாவாடை சாத்துதல், 5.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. அப்போது மாரியம்மனுக்கு அன்னப்பாவாடை, உற்சவ விழா சிறப்புடன் நடைபெறும். செவ்வாய்ப்பேட்டை பாத்திர உற்பத்தி அண்ட் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில், உற்சவ விழா நடக்கிறது. மேலும், பாத்திர வணிகர்கள் ஆன்மிக ஊர்வலம் செல்கின்றனர். மகளிர் குழுவினர் பால் குடம் எடுத்து ஊர்வலமாக அம்மன் கோவிலுக்கு வருகின்றனர். அன்னாபிஷேகத்துக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை பக்தர்கள் வழங்கலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.