பதிவு செய்த நாள்
26
ஏப்
2017
12:04
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜர், ஆயிரமாவது ஆண்டு விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை, ஐ.ஜி., ஸ்ரீதர், நேற்று ஆய்வு செய்தார். ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு விழா, ஆதிகேசவப்பெருமாள் கோவிலில், ஏப்., 22ல் துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான, ஏப்.,30ல் நடைபெறும் தேரோட்டம் மற்றும் மே1ல் நடைபெறும் சாத்துமுறை விழாவில் கலந்து கொள்ள , பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீபெரும்புதுார் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, முன்னேற்பாடுகளை, வடக்கு மண்டல, ஐ.ஜி., ஸ்ரீதர், நேற்று ஸ்ரீபெரும்புதுார் வந்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இதில், காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட டி.ஐ.ஜி., நஜ்மல் ஹோடா, காஞ்சிபுரம் எஸ்.பி., சந்தோஷ் ஹதிமனி, ஸ்ரீபெரும்புதுார் டி.எஸ்.பி., சிலம்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.