பதிவு செய்த நாள்
26
ஏப்
2017
11:04
ஆர்.கே.பேட்டை: சமத்துவபுரத்தில் உள்ள பெரியபாளையத்து பவானியம்மனுக்கு, நேற்று, 108 குடம்ப ாலாபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பெண்கள், பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்தனர். ஆர். கே. பேட்டை அருகே , திருத்தணி சாலையில் உள்ளது. சமத்துவபுரம். இங்கு, 130 குடியிருப்புகள் உள்ளன. சிறப்பு பூஜை கிராமத்தின் வடக்கே, பெரியபாளையத்து பவானியம்மன் கோவில் உள்ளது. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், சிறப்பு பூஜை கள் நடக்கின்றன. சித்திரையில், 108 பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. நேற்று காலை , 10:00 மணிக்கு, திரளான பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்தனர். பவள வீதி, மாணிக்க வீதி என, முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம், மதியம், 12:00 மணிக்கு, கோவில் வளாகத்தை வந்தடைந்தது. பக்தர்கள் தரிசனம் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. பின், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பவானியம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை , 3:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், பெண்கள் பொங்கல் வைத்து படையல் இட்டனர். மாலை , 6:00 மணிக்கு, விளக்கு பூஜை நடத்தப்பட்டது. பின், உற்சவர் அம்மன் உள்புறப்பாடு எழுந்தருளினார்.