Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமூல நட்சத்திர வழிபாடு நாராயணனை நம்பினால் குறை ஒன்றும் இருக்காது: ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் சொற்பொழிவு நாராயணனை நம்பினால் குறை ஒன்றும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவான் நாம் அர்ப்பணிக்கும் பொருட்களை பார்ப்பதில்லை: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
எழுத்தின் அளவு:
பகவான் நாம் அர்ப்பணிக்கும் பொருட்களை பார்ப்பதில்லை: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

பதிவு செய்த நாள்

21 டிச
2025
12:12

புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் மார்கழி திருப்பாவை மகோற்சவத்தில், நேற்று ஐந்தாம் நாளில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய திருப்பாவையின் 5ம் பாசுரத்தின் உபன்யாசம்:


பக்தி என்பது பரிசுத்தமான வாக்கு. இந்த பக்தியை மனம் மொழி மெய்யோடு -பரமனை அணுகுதல் வேண்டும் என்பதை உணர்த்துகிறாள் ஆண்டாள்.


இங்கனம் மனம், மொழி, மெய் ஆகிய முக்கருவிகளும் முரண்படாது. அவரவர் தத்தம் இயல்பில் நிற்பதே துாய்மை எனப்படும்.


இது தான் முப்பொறித் துாய்மை எனும் ‘த்ரிகரண சுத்தி’ என்பதை இந்தப் பாசுரத்தில் விளக்குகின்றாள் ஆண்டாள் நாச்சியார்.


அஹிம்சை, இந்த்ரியநிக்ரஹம், ஸர்வபூத தயை, க் ஷமை, ஜ்ஞாநம், தபஸ், தியானம், உள்ளிட்ட எட்டுவிதமான மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் எம்பெருமான் மிக மிக சந்தோஷமடைவான். பகவான் நாம் அவனிடம் அர்ப்பணிக்கும் பொருட்களைப் பார்ப்பதில்லை. மனதில் பக்தி உள்ளதா என்றுதான் பார்க்கிறான். ஒரு பழம் அல்லது ஒரு பூ அல்லது ஒரு இலையாக துளசி தளம், கொஞ்சம் தீர்த்தம். இவையே போதும் என்னைத் துதிப்பதற்கு பகவத் கீதையில் கண்ணன் உபதேசித்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவை எதுவும் இல்லவிட்டால் கூட, பக்தியால் ஈற்படும் - ஒரு சொட்டு கண்ணீர் போதுமே.


அதனால் தான் ‘ஆடியாடி யகம் கரைந்து, இசை பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும் நாடிநாடி நரசிங்காவென்று, வாடிவாடும் இவ்வாணுதலே என்றருளினார் நம்மாழ்வார்.


இதை ஒட்டியே, மனம், மொழி மெய் மூலம் செய்யும் அனைத்திலும் வாய்மையும், துாய்மையும் இருக்க வேண்டும் என்பதை பாசுரத்தில் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் என்று அருளியுள்ளதை மீண்டும் வலியுறுத்தும் வகையில் வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க என்று இந்த பாசுரத்தில் அருளியுள்ளாள் என்று அனுபவிக்க வேண்டும்.


இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.


உபன்யாசம் நேரம்


மார்கழி மாகோற்சவ உபன்யாசம் அடுத்த மாதம் 14ம் தேதி வரை தொடர்ந்து நடக்கின்றது. தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை உபன்யாசத்தை கேட்கலாம். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar