சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் ராம அழகர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது.முன்னதாக, அக்கசாலை விநாயகர் கோயிலில் இருந்து, கிராம மக்கள் ஊர்வலம் புறப்பட்டனர். சந்தன கருப்பணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மூலவர் லட்சுமிநாராயணருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகளும், கோயில் முன்பு கொடியேற்றம் நடந்தது.பின், கோட்டை மந்தை மைதானம், கடைவீதி, நடூர் சவுடம்மன் கோயில் பகுதிகளிலும் கொடியேற்றம் நடந்தது. மே 10ல் சித்ரா பவுர்ணமி நாளில் காந்திகிராமம் வெள்ளியங்கிரி நாதர் கோயில் சஞ்சீவி நதியில் ராமஅழகர் ஆற்றில் இறங்குதல் நடைபெற உள்ளது.மே 14ல் மோகினி அவதாரக்காட்சி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை, நிர்வாகஸ்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.