திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழா நாளை (ஏப்.,28) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஏப்.,28 முதல் திருநாள் காலை 8:00 மணிக்கு கொடியேற்றம், இரவு கேடயத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. ஏப்.,29 ல் 2ம் திருநாள் இரவு சுவாமி நந்திகேசுவரர் வாகனம், அம்பாள் சிம்மவாகனம் திருவீதி உலா என மே.,6 வரை காலையில் சிறப்பு தீபாரதனை, மாலையில் சுவாமி வீதியுலா நடக்கிறது. பத்தாம் திருநாள் மே 7 மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் பூப்பல்லக்கில் சுவாமி வீதிஉலா, 11ம் திருநாள் மாலை 6:00 மணிக்கு திருத்தேர், 12 ம் திருநாள் காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி பூஜை நடக்கிறது.