பதிவு செய்த நாள்
28
ஏப்
2017
10:04
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. முன்னதாக, மீனாட்சியம்மன் கோவில் சுவாமி சன்னதியில் வேத விற்பன்னர்கள் யாகம் வளர்த்தனர். சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
சரியாக இன்று 11.45 மணிக்கு சி்த்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சி சிம்மவாகனத்திலும் பவனி வருகின்றனர். மே 5ல் இரவு 6:55 மணிக்கு மேல் இரவு 7:19 மணிக்குள் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம். மே 6ல் மீனாட்சி அம்மன் திக்குவிஜயம். மே 7 ல் காலை 8:35 மணிக்கு மேல் காலை 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். மே 8 ல் காலை 6:00 மணிக்கு திருத்தேரோட்டம் வடம் பிடித்தல் நடக்கிறது. திருக்கல்யாண சிறப்பு கட்டண தரிசன விபரம் ஓரிரு நாளில் வெளியாகும். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.
மதுரை சித்திரைத் திருவிழா, 2017
ஏப்ரல் 28, 2017 - வெள்ளிக்கிழமை - சித்திரையில் திருவிழா (கொடியேற்றத்துடன்) - கற்பக விருட்சம், , சிம்ம வாகனம்
ஏப்ரல் 29, 2017 - சனிக்கிழமை அன்ன வாகனம்
ஏப்ரல் 30, 2017- ஞாயிறு - கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
மே 1, 2017 - திங்கட்கிழமை - தங்கபல்லக்கு
மே 2, 2017 - செவ்வாய்க்கிழமை - வேடர்பரி லீலை - தங்கவாகனம்
மே 3, 2017 - புதன்கிழமை - சைவ சமய ஸ்தாபித லீலை வரலாறுரிஷப வாகனம்
மே 4, 2017 - வியாழக்கிழமை - நந்திகேஸ்வரர், யாழி வாகனம்
மே 5, 2017 - வெள்ளிக்கிழமை - ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் - வெள்ளிஸிம்ஹாஸன உலா
மே 6, 2017 - சனிக்கிழமை - ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் - இந்திரன் விமானத்தில் உலா
மே 7, 2017 - ஞாயிறு - ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம் * யானை வாகனம், புஷ்ப பல்லாக்கு
மே 8, 2017 - திங்கட்கிழமை -தேரோட்டம் - சப்தாவரண சப்பரம்
மே 9, 2017 - செவ்வாய்க்கிழமை - தீர்த்த வாரி; ரிஷப வாகனம்
கள்ளழகர்
மே 9, 2017 - செவ்வாய்க்கிழமை - எதர் சேவை
மே 10, 2017 - புதன்கிழமை - ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்* - 1000 பொன் சப்பரத்துடன்- இரவு வண்டியூர்
மே 11, 2017 - வியாழக்கிழமை - ஸ்ரீ கள்ளழகர் - வண்டியூர் தேனுõர் மண்டபம் - சேஷ வாகனம் காலை - மதியம் கருடன் வாகனம் - மண்டூகமகரிஷி க்கான மோட்சம் - இரவு ராமராயர் மண்டபம் தசாவதார காட்சி
மே 12, 2017 - வெள்ளிக்கிழமை - காலை மோகினி அவதாரம் - இரவு கள்ளழகர் புஷ்ப பல்லாக்கு. மைசூர் மண்டபம் திருக்கோலம்
மே 13, 2017 - சனிக்கிழமை - ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருளல்.