பதிவு செய்த நாள்
29
ஏப்
2017
02:04
பாக்கம் : பாக்கம், ஆனந்தவல்லி உடனுறை ஆனந்தீசுவரர் கோவிலில், வரும், 1ம் தேதி, திருக்கல்யாண பெருவிழா நடைபெற உள்ளது.
திருவள்ளூர் அடுத்த, பாக்கம் கிராமத்தில் உள்ள சித்தேரிக்கரையில் உள்ளது ஆனந்தவல்லி உடனுறை ஆனந்தீசுவரர் கோவில். இங்கு வரும், 1ம் தேதி, நான்காம் ஆண்டு தொடக்க விழாவும், திருக்கல்யாண பெருவிழாவும் நடைபெற உள்ளது.
முன்னதாக, அன்று காலை, 8:10 மணிக்கு, வேள்வித் தொடக்கமும், திருமஞ்சன வழிபாடும் நடைபெறும். அதை தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு, மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டும், காலை, 11:00 மணிக்கு திருக்கல்யாணத்திற்கு சீர்வரிசை கொண்டு வருதலும் நடைபெறும்.
பின், பகல், 12:00 மணிக்கு திருக்கல்யாண வழிபாடும், மாலை, 5:00 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் வீதிஉலாவும் நடைபெறும்.