திண்டிவனம்: திண்டிவனத்தில் ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் உற்சவத்தையொட்டி, பக்தர்கள் கத்திபோடும் விழா நடந்தது. திண்டிவனம் காவேரிப்பாக்கம் திரு.வி.க., வீதியில் உள்ள செல்வவிநாயகர், சாமுண்டீஸ்வரி அம்பிகை மற்றும் கோஷ்டமூர்த்தி, பரிவார மூர்த்திக்கு நேற்று முன்தினம், கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மகா உற்சவ விழா நடந்தது. வீரபத்திர சுவாமி கோவில் இருந்து கலச அலங்காரம், அம்பாள் ஆவாஹனம், கடம் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வீரகுமாரர்கள் ஜம்பு ஜாரியுடன் கத்தி போட்டுக்கொண்டு, நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.