ஆண்டிபட்டி ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் கொடியேற்று விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2017 02:05
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம்நடந்தது. விழாவில் கோயில் பிரகாரத்தில்வாசாந்தி எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.சக்கரத்தாழ்வார் முன்னிலையில் கொடிப்பட்டம் கொண்டுசெல்லப்பட்டு, கோயில் வீதியில் உலா கொண்டு சென்றனர்.மே8 ம் தேதி வரை தினமும் இரவு 8 மணிக்கு கோயிலில் சுவாமிவலம் வரும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே9 ம் தேதிசுவாமி திருத்தேர் எழுந்தருளல், மே 10, 11, தேதிகளில்மாலை 4 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் சந்திரசேகரன், செயல் அலுவலர் அருள்செல்வன்ஆகியோர் முன்னிலையில் விழாக்குழுவினர் செய்துஉள்ளனர்.