காரைக்காலில் ராமானுஜரின் 1000வது ஜெயந்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2017 04:05
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ராமானுஜரின் 1000வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் பக்த ஜனசபா சார்பில் நேற்று முன்தினம் பகவத் ஸ்ரீராமாநூசரின் 1000வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெருமானுடன் ஏகாசனத்தில் ஸ்ரீராமானுஜர் திருமஞ்சனம் நடந்தது. முன்னதாக பெருமாள் மற்றும் ராமானுஜருக்கு பலவகையான திரவங்கள் கொண்டு சிறப்பு ஆபிஷேகம் நடந்தது.பின் ராமாபுநுஜர் சூரிய ப்ரபை வாகனத்தில் முதல் முறையாக திருவீதியுலா நடந்தது. பின்முக்கிய வீதிகள் வழியாக சென்று பின் கோவிலுக்கு வந்தடைந்தது.நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தானம் சிறப்பாக செய்திருந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுராமானுஜரை வழிப்பட்டனர்.