பொள்ளாச்சி : கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 41வது ஆண்டு பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. இதற்காக கடந்த 1ம் தேதி மாலை, 5:00 மணிக்கு கருட பிரதிஷ்டம் செய்யப்பட்டது; 2ம் தேதி காலை, 8:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு புண்யாகவாசனம், ரட்சாபந்தனம், யாகசாலை துவக்கம், மாலை, 6:00 மணிக்கு பெருமாள் ராஜ அலங்காரத்தில், சிம்ம வாகனத்தில் திருவீதியுலா வந்தருளினார். நேற்று காலை, 9:00 மணிக்கு ஸ்ரீவெங்டாஜலபதி அலங்காரத்தில் திருப்பல்லக்கிலும், மாலை 6:00 மணிக்கு ஸ்ரீஆண்டாள் அலங்காரத்தில் அன்னப்பட்சி வாகனத்திலும் எழுந்தருளினர். விழா வரும் 12ம் தேதி வரை நடக்கிறது.