அழகர்கோவில்: அழகர்எழுந்தருளும் வாகனங்கள் அழகர்கோவிலில் இருந்து நேற்று மதுரைக்கு எடுத்து வரப்பட்டன. அழகர்கோவில் சித்திரை திருவிழா இன்று துவங்குகிறது. முதல் 2 நாட்களும் பல்லக்கில் புறப்படும் பெருமாள் கோயிலைசுற்றி வலம் வருகிறார். முக்கிய விழாவான வைகைஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே10ம் தேதி காலை6:45 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து அன்றிரவு வண்டியூரில் எழுந்தருளும் கள்ளழகர் மே11ம் தேதி காலை கருடவாகனத்தில் எழுந்தருளுகிறார். பகலில் சேஷ வாகனத்தில் எழுந்தருளும் அழகர், வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனுார் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். இதற்காக நேற்று காலை அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து தங்ககுதிரை, கருடன், சேஷ வாகனங்கள் வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. குதிரை வாகனம் தல்லாகுளம் பெருமாள் கோயிலிலும், மற்றவாகனங்கள் வண்டியூர் பெருமாள் கோயிலிலும் வைக்கப்பட்டுள்ளன.