அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2017 11:05
அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது. அருள்மிகு இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழா அச்சிறுப்பாக்கத்தில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஏப்ரல், 28ல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வரும் இவ்விழாவில் நேற்று தேரோட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் ப ற்றி, தேரை இழுத்தனர்.
குடிநீருக்கு தவித்த பக்தர்கள்: கோவில் நிர்வாகம் மற்றும் பேரூராட்சி சார்பில் குடிநீருக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யாமல் அலட்சியமாக இருந்ததால், பக்தர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். காலையிலிருந்தே கொளுத்தத்துவங்கிய வெயிலால், நா வறண்ட பக்தர்கள் தண்ணீருக்கு அலைந்தது பரிதாபமாக இருந்தது.
ஆம்புலன்ஸ் இல்லை: ஏராளமானோர் திரளும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்த் திருவிழாவின் போது, அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் முன்னேற்பாடாக இருக்க வேண்டும் என்பதை கோவில் நிர்வாகத்தினர் கண்டு கொள்ளவில்லை. பாதுகாப்பிற்கு வந்திருந்த பெரும்பான்மையான ஊர்க்காவல் படையினர் கும்பல் கும்பலாக ஆங்காங்கே ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர்.கோவில் நிர்வாகத்தினர் இன்னும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கலாம் என, பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.