திண்டுக்கல்: திண்டுக்கல் செட்டியபட்டி அருகே விஜயநகரத்தில் மகாலட்சுமி குபேரர் கோவிலில் லட்சுமி குபேர ஹோமம் நடந்தது. முன்னதாக காலை 9:30 மணிக்கு மகாலெட்சுமி, குபேரர், சித்ரலேகாவிற்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மகா ஆரத்திக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வியாபார விருத்திக்கான லட்சுமி குபேர ஹோமம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு குபேர பிரசாதம் வழங்கப்பட்டது.