உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகாவில் நாட்டாமங்கலம் மூன்று தேவர் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட ஆதிசிவன் கோயில், ராஜகோபுரம், ஓங்கார சோணைமுத்து விநாயகர், வடக்குவாசல் செ்ல்லிஅம்மன், பூர்ண புஷ்கலாம்பாள் சமேத அய்யனார் ஆகிய நான்கு கோயில்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நாளை(மே 7) நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது. இரவு 7:00 மணிக்கு யாகசாலை பிரவேச பூஜைகளும் முதல் கால யாக வேள்விகளும் நடந்தன. இன்று காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால பூஜைகளும் நடக்கின்றன. நாளை காலை 4:30 க்கு நான்காம் கால பூஜைகளும் காலை 7:28க்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. இதைதொடர்ந்து சுவாமிகளுக்கு அபிேஷகம் நடக்கிறது. மூன்று நாட்களும் அன்னதானம் வழங்குகின்றனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் தங்கம் குரூப்ஸ் சேர்மன் ராஜாங்கம், பெரியவாகைக்குளம், சின்னவாகைக்குளம், பெருங்காமநல்லூர், நாட்டாமங்கலம், அய்யம்பட்டி, சக்கரைப்பட்டி, நாகலாபுரம் கிராம மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.