Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை மீனாட்சி பூப்பல்லக்கு ... கோவை கோவிலில் திருக்கல்யாணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 6,000 பேர் இலவச தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2017
01:05

மதுரை:மீனாட்சி அம்மன் - சொக்கநாதர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு தெற்கு கோபுரம் வழியாக இலவச தரிசனத்திற்கு 6000 பேர் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. மணமேடை 100 டன் ஏ.சி. வடக்கு ஆடி வீதி, மேற்கு ஆடி வீதியில் 300 டன் ஏ.சி. வசதி செய்யப்பட்டது. மேற்கு கோபுரம் காலை 7:00 மணிக்கு மூடப்பட்டது. 500 ரூபாய் கட்டண டிக்கெட் வைத்திருந்தோரை அனுமதிக்கவில்லை. கிழக்கு
கோபுரம் வழியாக வி.ஐ.பி.,க்கள், அரசு அதிகாரிகள், பாஸ் இல்லாத பலர் அனுமதிக்கப்பட்டனர். கோயில் உட்பிரகாரம், சித்திரை வீதிகளில் 20 இடங்களில் எல்.சி.டி., திரையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. போலீஸ் அதிகாரிகள், போலீசார் குடும்பத்தினருக்கு தனி கேபின் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. திருக்கல்யாணம் முடிந்ததும் பெண்கள் தாலிக்கயிறை மாற்றிக்கொண்டனர்.

* 50 ரூபாய், 100 ரூபாய் திருக்கல்யாண மொய் காணிக்கையை  பக்தர்கள் செலுத்தி ரசீது பெற்றனர். திருக்கல்யாண தாம்பூலம் வழங்கப்பட்டது. சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தனியார் டிரஸ்ட் சார்பில் திருக்கல்யாண விருந்து காலை முதல் மாலை வரை
நடந்தது.

* மேற்கு கோபுரம் வழியாக காலை 7:15 மணிக்கு கோயிலுக்குள் செல்ல உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் உதவியாளரை போலீசார் அனுமதிக்கவில்லை. என்னை தடுக்கும் உங்கள் பெயர்
என்ன?. என உதவியாளர் கேட்டார். அதற்கு நான் கோயில் உதவி கமிஷனர் கண்ணதாசன். அனுமதிக்க முடியாது. யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள், என்றார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மீனாட்சி திருக்கல்யாணம் குன்றம் முருகன் புறப்பாடு திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம் (மே 7) நடந்தது. அதில் பங்கேற்க  திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டனர். பெற்றோர் திருக்கல்யாணத்தில் பங்கேற்று, மே 10ல் மதுரை சுவாமிகளிடம் விடைபெறும் நிகழ்ச்சி நடக்கும்.மே 11 காலையில் சுவாமி, தெய்வானை புறப்பாடாகி,
தெற்காவணிமூல வீதி மண்டபத்தில் எழுந்தருளி, மாலையில் பூப்பல்லக்கில் புறப்பாடாகி, மதுரை கோயிலில் பெருமாளை அழைத்துக் கொண்டு திருப்பரங்குன்றம் கோயில்
திரும்புவர். கோயில் வழக்கம் போல் திறந்திருக்கும். மே 11 வரை தங்க ரதம் புறப்பாடு இல்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம், பொற்பாத விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த 14ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar