விழுப்புரம்: பெரும்பாக்கம் வேங்கட வரதராஜப் பெருமாள் கோவிலில், கோடியர்ச்சனை பூர்த்தி வைபவம் நடந்தது.விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்திலுள்ள வேங்கட வரதராஜப் பெருமாள் கோவிலில், கோடியர்ச்சனை பூர்த்தி விழா கடந்த 4ந் தேதி மாலை சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து காலசந்தி பண்யாகம், திருவாராதனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து, நேற்று முன் தினம் மாலை கோடியர்ச்சனை கடைசியாவர்த்தி நடந்தது. அதனை தொடர்ந்து ஆராதனம் மற்றும் வேத பிரபந்த சாற்றுமுறையும் நடந்தது. இதில் ஏராளாமான பக்தர்கள்கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.