பதிவு செய்த நாள்
08
மே
2017
03:05
திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் திருத்தேர் உற்சவம் நேற்று நடந்தது.
திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில், பிரம்மோற்சவ விழா, கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி,தினந்தோறும் காலை மற்றும் மாலையில், திந்திரிணீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் உற்சவம் நேற்று காலை நடந்தது.
விழாவில், அமைச்சர்சண்முகம் பங்கேற்று, தேரை வடம்பிடித்து துவக்கி வைத்தார். இதில் ராம்டெக்ஸ் வெங்கடேசன், ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க.,நகர செயலாளர் தீனதயாளன்,
முன்னாள் கவுன்சிலர்கள் நட்ராஜ், விஜயகுமார், சுதாகர் உள்ளிட்ட
பலர் கலந்து கொண்டனர்.
தேரோட்ட்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாட வீதி வழியாக தேர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு, டவுன் டி.எஸ்.பி.,திருமால் தலைலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.