பதிவு செய்த நாள்
10
நவ
2011
11:11
நான்குநேரி : நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் இன்று (10ம் தேதி) ஒரு கோட்டை எண்ணெய் காப்பு விழா நடக்கிறது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் ஆறுபங்கு நாட்டார்கள், மறுகால்குறிச்சி பக்த பெருமக்கள் சார்பில் மழை வேண்டியும், நாடு செழிக்கவும், நல்வளம் கொழிக்கவும் வேண்டி பெருமாளுக்கு ஒருகோட்டை எண்ணெய் காப்பு விழா நடக்கிறது. இதையொட்டி இன்று (10ம் தேதி) காலை 8 மணிக்கு விச்வரூப தரிசனம் நடக்கிறது. பின் காலை 9 மணிக்கு பெருமாளுக்கு ஒருகோட்டை எண்ணெய் காப்பு நடக்கிறது. அதை தொடர்ந்து 11.30 மணிக்கு தீர்த்த அபிஷேகம், தீர்த்த வினியோகம் சாற்றுமுறை நடக்கிறது. இரவு 7 மணிக்கு சந்தனக்காப்பு, 8 மணிக்கு மேள கச்சேரி நடக்கிறது. 12 மணிக்கு பெருமாள், நாச்சியார், ஆண்டாள் ஆகியோர் கருடன், கஜலெட்சுமி, கிளி வாகனங்களில் வீதிஉலா நிகழ்ச்சியும், பின் வாணவேடிக்கையும் நடக்கிறது. எண்ணெய் காப்பு விழாவையொட்டி இன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தனலெட்சுமி கல்யாண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ஆறுபங்கு நாட்டார்கள், மறுகால்குறிச்சி பக்த பெருமக்கள் செய்து வருகின்றனர்.